Friday, June 11, 2021

சாபம்

எனக்கு என்னவோ நீங்க செஞ்சது சரியா படல டா நீயும் மணியும் ஒன்னா சேந்தா இந்த மாதிரி எதாவது பண்றிங்க அதுவும் இன்னைக்கு நீங்க பண்ணுனது ரொம்ப பயமா இருக்கு ஏதோ தப்பா நடக்க போகுது டா எதுக்கும் கோவிலுக்கு போலாம் என்று பயந்தவாறே கூறிவந்தான் மகேஷ்
        ஏன்டா இந்த காலத்துலயும் பேய் பிசாசுனு பயப்படுர இப்போ spaceக்கே racket விட்டுக்கிட்டு இருக்காங்க நீ இன்னும் இந்த பழைய புராணம் பாடிகிட்டு இருக்க. என்னதான் நடக்குமுன்னு தெரிஞ்சிக்க தான் இப்படி பண்ணினொன் பாப்போம் என்ன நடக்குதுன்னு என்று கூறினான் அருண் 
        சூரியன் செங்கதிர்களை வீசிக்கொண்டு மேற்கே மறைந்து கொண்டிருந்தது வானம் முழுவதும் வழக்கத்திற்கு அதிகமாக அடர்ந்த சிவப்பு நிறத்தில் காட்சியளித்தது இருவரும் வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தனர்
         நான் என்ன சொன்னாலும் நீ கேட்கமாட சேரி நான் வீட்டுக்கு போரேன் நாளைக்கு காலேஜ்ல பாக்கலாம் என்றான் மகேஷ்.
       ஏன் நீ படத்துக்கு வருவீல
     நான் வரலடா இப்பவே இப்படி பண்றிங்க நைட் அங்க மறுபடியும் போவோமுன்னு சொல்லுவிங்க  நான் வரல
         Okடா நாளைக்கு பாக்கலாம் நைட்டு நீ எங்கேயும் போயிடாத பேய் எதாவது தூக்கிட்டு போயிட போகுது என்று சிரித்தவாறே கிளம்பினான் அருண்.
         தன் வீடு இருக்கும் நகரை அடைந்தான் அருண் 
       அது புதிதாக உருவாக்கப்பட்ட நகர் கணிசமான வீடுகளே கட்டப்பட்டிருந்தது ஊருக்கு ஒதுக்கு புறமாக இருப்பதால் பகல் நேரத்தில் கூட மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதி.
        என்றும் நிசப்தமாக இருக்கும் நகர் இன்று பறவைகள் கீச்சிடும் சத்தம் எங்கும் ஒலித்தது கிழக்கில் கருத்த மழை மேகங்கள் இடி மின்னலுடன் விரைந்து கொண்டிருந்தது.
      வீட்டை வந்து அடைந்திருந்தான்
அருண் கேட் கதவு வெளிப்புறமாக தாளிட்டிருந்தது உள்ளே கதவு பூட்டப்பட்டிருந்தது அப்பாவின் வண்டியும் காணவில்லை அருண் தன் செல்போனை அப்பாவிற்கு கால் செய்தான்
          Hello அப்பா எங்க போயிருக்கிக வீடு பூட்டி இருக்கு
          டேய் அப்பா வண்டி ஓடிக்கிட்டு இருக்காருடா மாமா கிட்ட இருந்து அவசரமா போன் வந்தது அதான் போய்கிட்டு இருக்கோம் 10 மணிக்கு வந்துடுவோம் நீ வீட்டுல இரு எங்கேயும் சுத்தாதே சாவி மீட்டர் பெட்டி மேலே இருக்கு என்று அம்மா கூறினார்.
       சேரிமா நான் பாத்துக்கிறேன் என்று போன் இணைப்பை துண்டிக்க சென்றான்
        டேய் சாமி விளக்கு அணைக்க மறந்துட்டேன்டா அதை அணைச்சிடு என்று போனை இணைப்பை துண்டித்தார் அம்மா.
        கேட்டை திறந்துவிட்டு சைக்கிளை உள்ளே வைத்துவிட்டு சாவி எடுக்க சென்றான் இவ்வளவு நேரம் கீச்சிட்டு கொண்டிருந்த பறவைகளின் சத்தம் நீங்கி எங்கும் நிசப்தமாக மாறியது 
         சாவியை எடுத்துகொண்டு கதவை தொட்ட நொடியில் சாமி விளக்கு தானாக அணைந்தது கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றான்
          Tvயை ஆன் செய்துவிட்டு பாத்ரூமில் கைகால் கழுவிட்டு முன்பே தயார் செய்யப்பட்ட டீயை சூடு செய்துகொண்டிருந்தான் 
        திடிரென கொல்லைப்புறத்தில் இருந்து சத்தம் கேட்டது அடுப்பை அணைத்து விட்டு கொல்லைக்கு பார்க்க சென்றான்
      மழை மேகங்கள் சூழ்ந்து இருந்ததால் 6.30 மணி‌ போழுதுலேயே நன்றாக இருட்டி இருந்தது
        கொல்லைப்புற விளக்கை ஆன்  செய்துவிட்டு வெளியே வந்து பார்த்தான் யாருமில்லை மதில் சுவரை தாண்டி இருட்டி இருந்ததால் எதுவும் தெரியவில்லை வீடுகளுக்கு இடையே 200 மீட்டர் இடைவெளி இருப்பதால் இவ்வேளையில் யாரும் வருவதற்கும் வாய்ப்பில்லை
         யாருமில்லை என்று அருண் திரும்பி உள்ளே செல்லும் வேளையில் மீண்டும் சத்தம் கேட்டது மதில் சுவர் அருகில் இருந்த புதரில் இருந்து தான் சத்தம் வந்தது
      யாராவது இருக்கிறார்களா என்றும் குரலேழுப்பினான் பதிலில்லை
     திடிரென புதரின் நடுவே இரு கண்கள் மிளிரியது அவன் இதயம் ஒரு கணம் நின்றே போனது அந்த கண்கள் அவனையை கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தது 
     செய்வதறியாது திகைத்து நின்றான் பெரிய தவறு செய்து விட்டேமே என்று அவன் மனம் குழம்பிது
    அந்த கண்களில் எந்த அசைவும் இல்லை கண் இமைக்க கூட இல்லை அவனையை கூர்ந்து பார்த்தது
      தைரியத்தை வரவழைத்து கொண்டு அருகே கிடந்த கல்லை  எடுத்து வீசினான் புதரில் இருந்து கருப்பு பூனை ஒன்று குதித்து ஓடியது
      'அடசே... பூனைய பாத்த இவ்வளவு நேரம் பயந்தேன் ஒரு நிமிசம் உயிரே போயிடுசி'
       ஒருவழியாக பயம் எல்லாம் நீங்கி கொல்லை கதவை அடைத்துவிட்டு சமையலறையில் நுழைந்தான் அடுப்பில் இருந்த டீ எடுத்துகொண்டு ஹால்க்கு திரும்பும் போது தான் கவனித்தான் 
       அவன் வீட்டுக்கு வந்த போது சமையலறை ஜன்னலை திறந்துவிட்ட நியாயம் அவனுக்கு இருந்தது ஆனால் ஜன்னல் இப்போது சாத்தி இருந்தது 
அருண் வெளியே இருந்த மனகுழப்பத்தில் தான் தவறாக எண்ணுவாத நினைத்து கொண்டான் ஜன்னலை திறந்துவிட்டு ஹாலுக்கு வந்து tv பார்க்க அமர்ந்தான் 
        வெளியே பெரும் காற்றுடன் மழை கொட்ட ஆரம்பித்தது கடும் மழையால் tvக்கு வரும் signal நின்றது tvயை ஆஃப் செய்துவிட்டு சமையலறைக்கு டீ கப்பை வைக்க சென்றான் அவன் திறந்து வந்திருந்த ஜன்னல் மீண்டும் மூடியிருந்தது 
     மிகுந்த குழப்பத்துடன் ஜன்னல் அருகே சென்றேன் ஜன்னலை மீண்டும் திறக்க முயன்றபோது மிகவும் சிரமமாக இருந்தது முழுபலத்துடன் தள்ளியவுடன் திறந்து கொண்டது
       திறந்த நொடிப்பொழுதில் ஜன்னல் வெளியே ஒரு உருவம் ஒரு நொடி தோன்றி மறைந்தது அதே வேளையில் வீட்டின் மின்சாரமும் நின்று போனது வெளியே தோன்றிய உருவத்தை அவன் கவனிக்கவில்லை
    'மழை வந்துடாலே இந்த eb காரங்கலோட இதுவே பொழப்பா போச்சி'
         மின்சாரம் கட் ஆனதால் வீடு முழுவதும் இருட்டாக இருந்தது வெளியே சூறைக்காற்றும் மழையும் ஓலமெழுப்பி கொண்டிருந்தது இடையிடையே மின்னலும் வெட்டியது மின்னலின் ஒளியில் ஒருவழியாக தன் அறைக்கு வந்து செல்போனை எடுத்தான் 
     மொபைலில் டார்ச் லைட்டையை ஆன் செய்தபோது தான் கவனித்தான் அறையின் ஜன்னல்களும் சாத்தி இருந்தது வேகமாக சென்று சமையலறையை பார்த்தான் அந்த ஜன்னல்களும் சாத்தியை இருந்தது பயம் மீண்டும் மனதில் தொற்றிக்கொண்டது
       வீட்டின் கதவை திறந்து வெளியே செல்ல முயன்றான் என்ன முயன்றும் திறக்க முடியவில்லை கொல்லைப்புற கதவையும் எல்லா ஜன்னலையும் எவ்வளவோ முயன்றும் திறக்க முடியவில்லை  காற்றின் கோரத் தாண்டவம் மேலும் அதிகரித்திருந்தது
       மொபைலில் கால் செய்ய முயன்ற போது செல்லில் சுத்தமாக டவர் இல்லை
      திடிரென அவன் அறையிலிருந்து போன் கால் வரும் சத்தம் கேட்டது அருணுக்கு பயம் கலந்த ஆச்சரியமாக இருந்தது கையில் மொபைல் இருக்கும் போது எப்படி அறையில் இருந்து சத்தம் வரும் என குழப்பமாக இருந்தது 
       தைரியத்தை வரவழைத்து கொண்டு அறைக்கு சென்றேன் அறையில் நுழைந்த நொடியில் அறைக்கதவு சாத்திக்கொண்டது எவ்வளவு முற்பட்டும் கதவை திறக்க முடியவில்லை கையில் இருந்த மொபைல் டார்ச் லைட் திடிரென அணைந்தது பார்த்தால் மொபைல் ஆஃப் ஆகி இருந்தது
       மின்னலின் மங்கிய ஒளியில் தான் அறை ஒரளவு தெரிந்தது அறையில் அவனை தவிர வேறு யாரோ இருப்பது போல் உணர்ந்தான் ஆனால் அங்கே யாருமில்லை திடிரென மின்னலின் ஒளியில் ஜன்னலின் வெளியே ஒரு உருவம் தோன்றியது 
       தோன்றிய உருவம் மெதுவாக பக்கவாட்டில் சென்று மறைந்தது பாத்ரும் லைட் திடிரென எரிந்தது மற்ற லைட்டுகளை ஆன் செய்து பார்த்தான் எரியவில்லை பாத்ரும் கதவின் கீழ் இடைவெளி வழியே ஒரு நிழல் தோன்றியது 
        பாத்ரும் கதவின் நோக்கி அது நகரும் சத்தம் கேட்டது பாத்ரும் கதவு மெதுவாக திறந்தது அருண் பயந்து அறை கதவை திறக்க ஓடினான் அந்த மர்ம உருவம் அவன் கால்லை பிடித்து பாத்ருமில் இழுத்துச் சென்றது கதவு மூடிக்கொண்டது பாத்மின் மின்விளக்கும் அணைந்தது.
                                    -தொடரும்-

1 comment: