Sunday, April 29, 2018

மாயவனம்

                           மாயவனம்
          கதிரவன் மறையும் அந்திபொழுது ஹரி தன் வண்டியில் நண்பனின் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தான் அப்போது அவன் ஃபோனில் நண்பனிடமிருந்து அழைப்பு வந்தது
    Hello நான் வந்துகிட்டே இருக்கேன்டா
    இப்போ எங்க இருக்க என்று நண்பன் கேட்டான்
     நான் பைபாஸ் சாலைல வந்துகிட்டு இருக்கேன்டா
    அப்படியே வந்தினா லெஃப்ட் பக்கத்துக்கு நந்தவனம்னு ஃபோர்டு இருக்கும் அது வழியா வந்தா 15km தான்
    சேரிடா நான் வந்திடுரேன் என்று கூறி ஃபோனை வைத்தான் ஹரி
     சூரியன் தொடுவானத்தை நெருங்கி கொண்டிருந்தது
     வழியின் குறுக்கே ஆறு ஒன்று சென்றது அந்த ஆற்றின் கரை ஓரமாக ஒரு சாலையில் இருந்த ஃபோர்டில் நந்தவனம் என்று இருந்தது
        ஹரி அந்த பாதையில் சென்றான் அந்த பாதையில் திரும்புய உடனே ஒரு அமானுஷ்ய காற்று வீசியது
       ஹரி அதை கவனிக்கவில்லை அவன் மேலும் தொடர்ந்து சென்றான்  பாதை செல்ல செல்ல பயன்படுத்தி பல வருடம் ஆனது போல் இருந்தது
          அவனின் உள்ளே ஒரு இனம் புரியா பயம் உருவானது
       தன் வண்டியை நிறுத்திவிட்டு நண்பனுக்கு போன் செய்தான்
       அவன் போன் செய்த வேளையில் ஆற்றின் மறுகரையில் ஒரு கருப்பு உருவம் அவனை கவனித்துக் கொண்டுடிருந்தது அதை அவன் கவனிக்கவில்லை
           Hello டேய் நீ சொன்னது நந்தவனம் தான்டா என்று கேட்டான் ஹரி
          ஆமாம்டா நீ எங்க வந்துகிட்டு இருக்கேன்
        நான் அந்த வழியா தான் வந்துகிட்டு இருக்கேன் இந்த வழிய பாத்த பல வருசமா யூஸ் பண்ணாத மாதிரி இருக்கு டா
        டேய் ஆறு ஒட்டி ஒரு வழி வருதே அது வழியா வா வர என்று நண்பன் கேட்டான்
         ஆமாண்டா அந்த வழியா தான் வரேன்
        அந்த வழியில பேய் இருக்குறதா பல வருசமா பேசிக்கிறாங்கடா நீ திரும்பி வந்துடுடா
             Hello hello நீ சொல்லரது சரியா கேக்கலடா என்று  சொல்லும் போதே போன்கால் கட் ஆனது  மீண்டும் கால் செய்தான் ஃபோனில் டவரில்லை என்று காட்டியது
           அருகில் தானே வேகமாக வண்டியை ஓட்டிச் சென்றுவிடலாம் என்று முடிவெடுத்தான்.
         வண்டியை ஸ்டார்ட் செய்து ஆற்றின் மறுகரையை பார்த்தான் அந்த உருவம் இப்போது அங்கே இல்லை
        வண்டியை வேகமாக ஓட்டினான் வழியின் இருபுறங்களிலும் தன்னை யாரோ கண்காணிப்பது போல் இருந்தது
         அவ்வழியின் உள்ளே செல்ல செல்ல அவன் மனதில் பயமும் அதிகரித்தது வழியில் பாலம் ஒன்று குறுக்கே சென்றது
           பாலத்தை நெருங்கிய பொழுது வண்டி திடீரென நின்றது  வண்டியை பலமுறை ஸ்டார்ட் செய்தும் ஸ்டார்ட் ஆகவில்லை
         சூரியன் தொடுவானத்தில் பாதி மறைந்திருந்தது வானம் முழுவதும் செவ்வண்ணத்தில் காட்சியளித்தது அதுவே அவனுக்கு ஒரு பயத்தை ஏற்படுத்தியது. 
        திடீரென பாலத்தின் கீழிருந்து யாரோ கத்தும் குரல் கேட்டது வண்டியிலிருந்து இறங்கி பயத்துடன் பாலக்கட்டை வழியாக கீழே பார்த்தான் யாருமில்லை
           யாராவது கீழே இருக்கிங்களா என்று குரல் நடுங்கியவாரே கேட்டான் எந்த பதிலும் இல்லை
          தைரியத்தை வரவழைத்து கொண்டு பாலத்தின் கீழே இறங்கினான்  பாலத்தின் கீழ்பகுதியில் உள்ளேயும் பார்த்தான் அங்கும் யாருமில்லை
      இந்த இடத்தை விட்டு வேகமாக செல்லவேண்டும் என்று பாலத்தின் மேல் வேகமாக ஏறினான்
    மேலே வந்து பார்த்தபோது வண்டியை காணவில்லை அவன் தன் கையை பார்த்தான் வண்டியின் சாவி அவனிடம் இருந்தது
       என்ன செய்வது என்று தெரியாமல் சுற்றும் முற்றும் பார்த்தான் அப்போது பாலத்தின் ஒரு ஓரத்தை பார்த்தபோது பயத்தால் அவன் முகம் வேளிரிபோனது
        பாலத்தின் ஓரமாக ஒரு உடல் இரத்தம் வழிய கிடந்தது அவன் வந்தபோது அது அங்கே இல்லை
       ஹரி பயத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் நின்றான்.
      திடீரென அந்த உடல் அசைந்தது அதன் தலை அவன் புறமாக திரும்பியது
      அவன் பயத்தில் ஓட ஆரம்பித்தான் தன் மனதில் இருக்கும் கடவுள்களை எல்லாம் வேண்டி கொண்டான்
       அவன் பின்புறத்தில் வண்டியின் சத்தம் கேட்டது திரும்பி பார்த்தான் அவன் வண்டி நின்றது உடலை காணவில்லை வண்டியை நோக்கி வேகமாக ஓடினான்
       அவனை பின்புறத்தில் இருந்து ஏதோ இழுத்தது அவன் தடுமாறி கீழே விழுந்தான் எழுந்து பார்த்தபோது வண்டியை காணவில்லை
           எந்த பக்கம் செல்வது என்று தெரியாமல் பயத்தில் தவித்தான் அவன் பின்னால் ஒரு உருவம் வந்து நின்றது
          அவன் பயத்துடன் திரும்பி பார்த்தான் அவன் கருவிழிகள் இரண்டும் வெண்மையானது அவன் இறுதி மூச்சு அவனை விட்டு சென்றது
      

10 comments: